5 ஆண்டுகள் கழித்து காளவாய்ப்பட்டி செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள  காளவாய்ப்பட்டி கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோவில் அமைந்துள் ளது. 8 பட்டி கிராமங்களுக்கு சொந்தமான   இக்கோவிலில் ஆண்டுதோறும்  அனைத்து காப்புதாரர்கள்  காப்பு கட்டிக் கொண்டு திருவிழாவை நடத்துவது வழக்கம். 

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக காப்புதாரர் களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைத்து காப்புகளும் அம்மனுக்கு கட்டப்பட்டு திருவிழா நடை பெற்று வந்தது. 
இந்நிலையில்  திருவெள்ளறை கிராம  பரம்பரை பட்டையதாரர்கள்  சார்பில் காப்புதாரர்களுகிடையே நடத்தப்பட்ட சமரச பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற் பட்டது. 

இதனையடுத்து இந்த ஆண்டு  செல்லாண்டி அம்மன் கோவில்  திருவிழாவானது நேற்று அம்மனுக்கு கிடா வெட்டி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 

இதில் சின்னகாட்டுக்குளம் கிராம மக்கள்  பழக்க வழக்கத்தின்படி  காப்பு கட்டிக்கொண்டனர். தொடர்ந்து 14ம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. 15ம் தேதியன்று அம்மனுக்கு சந்தன காப்பு செய்யப்பட்டு மகா தீபாராதனை  நடக்கிறது.  

விழாவின் முக்கிய நாளான வருகிற 16ம் தேதி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து திருவீதியுலா வந்து அருள் பாலிக்கின்றார். விழாவிற்கான   ஏற்பாடுகளை திருவள்ளறை  கிராம பரம்பரை   பட்டடையதாரர் கள் நலச்சங்கத்தினர் சார்பில் செய்யப்பட்டு வருகிறது

Post a Comment

Previous Post Next Post