போதை கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி கைது

 

திருச்சி காந்தி மார்க்கெட் தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது25. இவரது மனைவி அழகுமணி (25). 

சதீஷ்குமார் காந்தி மார்க்கெட்டில் லோடு மேனாக பணி புரிந்து வந்த நிலையில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது. 

குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி அழகுமணி, அருவாள்மனையால் கணவரை வெட்டியுள்ளார். 

இதில் காயமடைந்த சதீஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுமணியை கைது செய்தனர்

Post a Comment

Previous Post Next Post