திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் போரை கைவிடக் கோரியும், உக்ரைனில் பயின்று வரும் இந்திய மாணவர்களை பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரியும் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதாகைகளை ஏந்தி போரை நிறுத்து, போரை நிறுத்து என்று கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் லோகநாதன் தன்ராஜ் மற்றும் மாணவர்கள் அஜித், குரு, அபினேஷ், மோகன், மருது, பிரசாந்த், பாரதி உட்பட கலந்து கொண்டனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்