தனியார் மயமாவதை கண்டித்து திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பாண்டிச்சேரி, சண்டிகார் உட்பட 9 யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மின்சார வாரியங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசாங்கம் ஒப்பந்தம்  ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாண்டிச்சேரியிலும், சண்டிகரில் மின்வாரிய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக  ஆதரவு ஆர்ப்பாட்டம்  மின்வாரிய  அலுவலகம் முன்பு நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொறியாளர் கழகம் இன்ஜினியர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அண்ணா தொழிற்சங்க பேரவை, எம்பிளாய்ஸ் பெடரேஷன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் கலந்து கொண்டன.

சிஐடியூ மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். கண்ணன், விக்ரமன், நரசிம்மன்,  அருள், தியாகராஜன்,   சிவசெல்வம், எஸ்.கே.செல்வராஜ்  உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து பேசினர்.

Post a Comment

Previous Post Next Post