மணப்பாறையில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டினார். அந்த பஸ் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே சென்றபோது, பஸ்சின் பின்பகுதி கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது. கற்களும் பஸ்சின் உள்பகுதியில் வந்து விழுந்தன. இதனைக்கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, பஸ்சை அதன் டிரைவர் நிறுத்தி விட்டு பார்த்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைத்ததுடன் டிரைவர் மீதும் கல்லை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த தகவலின்பேரில், மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச்சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்