சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

 

திருச்சி கள்ளிக்குடி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது19).இவர் அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதனைத் தொடர்ந்து இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்தால் நம்மை பிரித்துவிடுவார்கள் என்று கருதி, கடந்த ஜனவரி மாதம் 15&ந் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.

இந்த தகவல் சைல்டு லைன் அமைப்பிற்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் மணிகண்டம் பெண்கள் நல அலுவலரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அதிகாரி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். 

தகவலின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post