இனாம் சமயபுரம்மாரியம் மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதனையொட்டி மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை மேள தாளங்கள் முழங்க கூடைகளில் பூக்களை சுமந்து சென்றனர்.
அதனை கோயில் குருக்கள் வாங்கி மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு பூக்களை சாற்றினர். பரிவார மூர்த்திகளுக்கும் பூக்கள் சாட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைபயபக்தியுடன் வணங்கினர்.
மேலும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மன் படம் வைத்து அலங்கரிக்கப்பட்ட டிராக்டர், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றிவழிபட்ட னர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்