தாய் நாட்டுக்காக போரிட தயாரான டென்னிஸ் வீரர்


ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் இராணுவத்துடன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ல் ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச் சுற்றில் பங்கேற்ற ஸ்டாகோவ்ஸ்கி, தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக ஹங்கேரிக்கு அனுப்பி வைக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.   

இதுதொடர்பாக ஸ்டாகோவ்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனக்கு ராணுவ அனுபவம் இல்லை, ஆனால் துப்பாக்கியை கையாளும் அனுபவம் எனக்கு உள்ளது. என் அப்பாவும் சகோதரனும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். ஆனால் நான் அவர்களிடம் அடிக்கடி பேசி தைரியப்படுத்துகிறேன். அவர்கள் வீட்டின் அடித்தளத்தில் தூங்குகிறார்கள். நிச்சயமாக, நான் சண்டையிடுவேன், நான் திரும்பி வர முயற்சிக்கும் ஒரே காரணம் இதுதான்” என்று அவர் கூறினார்

Post a Comment

Previous Post Next Post