திருவெள்ளரை பெருமாள் கோவிலில் கிராம பரம்பரை பட்டையதார்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் வெங்கடாத்திரி தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதகண்ணன் பட்டர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருவெள்ளரை பெருமாள் கோவில் தேர்திருவிழா வரும் மார்ச் மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசின் விதிமுறையை கடைப்பிடித்து பொதுமக்களின் நலன்கருதி தேரோட்டம் அன்று காலையில் வடம்பிடித்து 11 மணிக்குள் தேரை நிலை நிறுத்த இணை ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருவெள்ளரை வடஜெம்புநாதர் ஆலயத்திற்கு உடனடியாக அர்ச்சகர் நியமனம் செய்ய வேண்டும்.
திருவெள்ளரை பெருமாள் கோயிலுக்கு உடனடியாக காவலர் நியமிப்பது, திருவெள்ளரை பெருமாள் கோயில் திருப்பணிகளை விரைவில் முடிவுறச்செய்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும்.
அதேபோல் செல்லாண்டியம்மன் கோயிலுக்கும் விரைவில் கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்