முசிறி அருகே சாலை பணியின் போது முறையான அளவீடு செய்யாமல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி-பொதுமக்கள் எதிர்ப்பு

 


திருச்சி  மாவட்டம்  முசிறி அருகே அலகரை  ஊராட் சிக்குட்பட்ட கோடியாம்பாளையம் கிராமத்தில் தெரு சாலைகள் அமைப்பதற்கான பணிகள் கடந்த திங்கட்கிழமை துவங்கியது.

அப்போது தெருவின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் உரிய அளவீடு செய்யமால் ஜேசிபி எந்திரத்தின்  உதவியுடன்  அகற்றும் பணியை ஊராட்சி தலைவர் ஜெயசுதா இல்லாமல் அவரது கணவர் சிவகுமார் மேற்பார்வையில் நடைபெற்றது.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளவீடு செய்யப்பட்டதில் தவறு  உள்ளதாகவும், ஊராட்சி மன்ற  தலைவர் நேரில் வராமல் தாங்கள் பணியை மேற்கொள்வது முறையற்றது என்றும் கூறினர்.

மேலும்  முன்கூட்டியே ஆக்கிரமிப்பு  அகற்றுவது குறித்து,  எங்களுக்கு  அறிவிப்பு எதுவும் கொடுக்கவில்லை. எனவே மீண்டும் மறு அளவீடு செய்து அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரி முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு   வந்த  தொட்டியம் போலீசார் உரிய அதிகாரிகள் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள கூடாது என கூறி மறு அளவீடு செய்து வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் சர்வே துறையினர் முன்னிலையில் ஆக்கிர மிப்புகளை அகற்றம் செய்யலாம் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வையுங்கள் என அறிவுறுத்தினர்.
 
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்  பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொது மக்கள் அலகரை பஞ்சாயத்து தலைவி ஜெய சுதா மீதும், அவரது கணவர் காவல் துறையில் பணியாற்றும் சிவகுமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முசிறி கோட்டாட்சியர் மாதவனிடம் செவ்வாய்கிழமை அன்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று கோட்டாட்சியர் கிராம மக்களிடம் உறுதி கூறியதைய டுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொது மக்களின் திடீர் வருகையால்  அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

Post a Comment

Previous Post Next Post