திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் எரகுடியிலிருந்து திருமானூர் செல்லும் சாலையில் சுமார் 300 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களது குடியிருப்பு அருகிலேயே சுமார் 50 அடி தொலைவில் இடுகாடு அமைந்துள்ளதாகவும், இறந்து போனவர்கள் உடலை தகனம் செய்யும்போது வரும் புகையானது காற்றில் பரவி அங்கு குடியிருக்கும் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிப்பதாகவும்
எனவே இடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் எடுத்து தர வேண்டி 2020-ல் தமிழ்ப்புலிகள் கட்சியினர் துறையூர் வட்டாச்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், கழிப்பிட வசதிக்காக கட்டப்பட்ட பொது கழிப்பிடம் திறக்கப்படாமல் இருப்பதால், பொது இடங்களில் கழிப்பிடம் செல்லும் பொது மக்களுக்கு, நோய் தொற்று ஏற்படுவதாகவும், கழிப்பிடத்தை உடனே திறக்க கோரியும் பொது மக்கள் எரகுடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் துறையூர் இன்ஸ் பெக்டர் செந்தில் குமார், குற்றப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் கலைசெல்வன், உப்பிலியபுரம் சப்-இன்ஸ் பெக்டர் ரெக்ஸ்ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 37 பேரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்