ஐந்து ரூபாய் அனுப்பியதால் 68 ஆயிரம் ஆப்பு

 

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 21) பட்டதாரி. இவர் வேலை தேடி வருகிறார். இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி இருப்பதாக அறிந்த அவர் டில்லியில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் போனில் நேர்முகத் தேர்வை சந்தித்துள்ளார். 

பின்னார் துபாய் செல்வதற்கான விசா பெறுவதற்கு தன்னுடைய கடவுச்சீட்டை கொரியர் மூலம் அந்நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இந்நிலையில் அவருடைய தந்தை சுப்பிரமணியனுக்கு செல்போன் மூலம் வந்த அழைப்பில் பல்வேறு தகவல்கள் கேட்டு பெற்றுக் கொண்ட அந்த மர்மநபர் அவரிடமிருந்து ரூ. 5 மட்டும் வங்கி கணக்கில் அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளார், அதன்படி ரூ.5 மட்டும் இவர் அனுப்பியுள்ளார். 

அதன்பின் 68 ஆயிரத்து 300 ரூபாயை மர்மநபர்கள் அவருடைய வங்கி கணக்கில் இருந்து திருடி உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீதர் சைபர் கிரைம் பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Post a Comment

Previous Post Next Post