இந்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் மானுடவியல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது இதன் தொடர்ச்சியாக மத்திய கலாச்சாரத்துறை மைசூர் தெற்கு மண்டல மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஷாலினி மற்றும் அருள் தயானந்த் ஆகியோர் தமிழ்நாட்டில் உள்ள முத்தரையர் சமுகம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
நேர்வில் மேற்படி ஆராய்ச்சி அலுவலர்கள் 10-12-2021 முதல் 17-12-2021 வரை மாவட்டம் பூனாம்பாளையம் ஊராட்சி பகுதி மற்றும் முசிறி பேரூராட்சி பகுதியில் முத்தரையர் சமூகத்தினர் பொருளாதாரம் சுகாதாரம் கல்வி கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் அதுசமயம் மேற்படி சமூக பொருளாதார கல்வி சுகாதாரம் தொடர்பான தேவையான தகவல்களை வழங்க வேண்டுமாறு திருச்சி மாவட்ட மாவட்ட ஆட்சியர் சு சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்