கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த இளம்பெண் தனது காதலனுடன் நேற்று ஓட்டம் பிடித்தார். காதல்ஜோடி இருவரும் நள்ளிரவில் வடசேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.
இதற்கிடையே இளம்பெண் மாயமானது குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது இளம்பெண் தனது காதலனுடன் வடசேரி பஸ் நிலையத்தில் நிற்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனே உறவினர்கள் மற்றும் இளம்பெண்ணின் பெற்றோர் வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் இளம்பெண்ணை மடக்கி பிடித்து காதலனிடம் இருந்து மீட்க முயன்றனர். ஆனால், அந்த இளம்பெண் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். அப்போது காதல் ஜோடிக்கும் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வடசேரி பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பஸ் நிலையத்திற்கு சென்று காதல் ஜோடியை மீட்டு அவர்களிடமும், உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Tags:
மாவட்டம்