திருப்பைஞ்ஞீலி பகுதியில் தொடர்ந்து அறுந்து விழும் மின்கம்பிகள் ; தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கம்பிகளை சரி செய்யுமா?

 


மழைக்காலங்களில் ஆங்காங்கே மின் கம்பிகள் அருந்து விழுவதும் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகிி விட்டது தமிழகத்தில்.

அந்த வகையில் இரண்டு வாரத்திற்கு முன்பு திருப்பைஞ்ஞீலி மெயின்ரோட்டில் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது யாரும் அங்கு அந்த நேரத்தில் செல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

தற்போது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே விவசாய பாசனத்திற்கு செல்லும் மின் கம்பி நேற்று இரவு 9 மணி அளவில் அறுந்து விழுந்தது அந்த நேரத்தில் யாரும் செல்லாமல் இருந்தாலும் அங்கும் விபத்து தவிர்க்கப்பட்டது பிறகு இரவு நேரத்திலேயே மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதுபோன்று தமிழகத்தில் ஆங்காங்கே அடிக்கடி நடந்து கொண்டுதான் உள்ளது இதை தமிழக மின்சாரவாரியம் தலையிட்டு வருடத்திற்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட வருடத்திற்கு ஒருமுறை மின் கம்பிகளின் தரத்தை உறுதி செய்து பிறகு பழுதான மின் கம்பிகளை அகற்றி புதிய மின் கம்பிகள் போட்டு இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post