பயிர் காப்பீடு இணையதளம் முடங்கியது ; விவசாயிகள் அவதி

 


மத்திய அரசின் மூலமாக ஒவ்வொரு வருடமும் ராபி சீசன் விவசாயிகள் பயிர் காப்பீட்டில் நெல், வாழை, மக்கா சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது இழ்ப்பீடு தொகை இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் மத்திய அரசின் மூலம் வழங்கப்படும்.

சி எஸ் சி பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பம் கொடுப்பர். நெல் பயிருக்கு வரும் 15ம் தேதி கடைசி என்பதாலும் தற்போது தொடர் மழை காரணமாகவும் எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது இணையதளம் முடங்கியதால் 24 மணி நேரமும் சி எஸ் சி சென்டர்கள் இயங்கினாலும் பயனில்லை என விவசாயிகள் கவலையில் உள்ளனர்

Post a Comment

Previous Post Next Post