இந்நிலையில் சென்னையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு கடந்த 2 ந்தேதி லதா சென்றுள்ளார். 7 ந் தேதி காலை சென்னையிலிருந்துகிளம்பி லதா பெரகம்பிக்கு திரும்பியுள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்திருப்பதனைக் கண்டு லதா அதிர்ச்சி அடைந்தார். பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 130 பவுன் மதிப்பிலான தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான வைரதோடு, ரொக்கப்பணம் 30ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுகனூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ஸ்பார்க் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக டிஐஜி சரவண கார்த்தி மற்றும் திருச்சி எஸ்பி மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருச்சி போலீஸ் எஸ்பி மூர்த்தி தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ,பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.