திருப்பைஞ்ஞீலி ஈச்சம்பட்டியில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது அந்த வகையில் திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்து சார்பாக ஈச்சம்பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக பள்ளிக்கல்வித் துறை சார்பாக மக்கள் கல்வி இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது அதை கிராமப்புறங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடையில் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பு குறைப்பதற்கு 15 முதல் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் கொண்டு தினசரி ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை குறைதீர் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மக்கள் பள்ளி என்கின்ற திட்டம் தமிழ்நாடு அளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்பட எட்டு மாவட்டங்களில் 18.10.2021 முதல் முன்னோடி ஆய்வாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது

 இதற்கு கிராம பஞ்சாயத்து தலைவர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அரசு அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் திருப்பைஞ்ஞீலி, மூவராயன் பாளையம்,  வால்மால்பாளையம், கவுண்டம்பட்டி, ஈச்சம்பட்டி  அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post