மணச்சநல்லூர் பகுதியிலேயே திருப்பைஞ்ஞீலி சந்தை என்பது மிகவும் பெரிய சந்தை ஆகும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் இங்கு வந்துதான் காய்கறிகளை வாங்கிச் செல்வர்.
சுமார் 150 இற்கும் மேல் காய்கறி வியாபாரிகள் வந்து செல்லும் இந்த சந்தையில் இன்று தொடர் மழை காரணமாக அனைவருக்கும் வியாபாரம் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதாலும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்று காய்கறிகள் வாங்கலாம் என்று எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் மழை காரணமாக நிறைய பேர் சந்தைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டனர். சென்றவர்களும் காய்கறிகள் சரியாக வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்