2-ம் நாளான இன்று முதல் 6-ம் திருநாளான 11-ந் தேதி வரையும் மற்றும் 8-ம் திருநாளான 13-ந் தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.
7-ம் திருநாளான 12-ந் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 14-ந் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்