திருச்சி சாலைகளுக்கு கார்கில் நாயகன் மேஜர் சரவணன் பெயர்

 


திருச்சியில் உள்ள ராயல் சாலை மற்றும் லாசன்ஸ் சாலைக்கு கார்கில் வீரர் மேஜர் சரவணனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேஜர் சரவணன் பெயரை திருச்சியில் உள்ள ஒரு சாலைக்கு வைக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் ராயல் ரோடு , எம்ஜிஆர் சிலை மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள லாசன்ஸ் ரோடு இரண்டிற்கும் மேஜர் சரவணன் சாலை  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு சாலைகளை இணைத்து ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு மேஜர் சரவணன் சாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு இந்திய எல்லையின் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய படைகள் விரட்டி அடித்தன. அப்போது இந்திய ராணுவத்தின் கார்கில் பகுதியில் மேஜர் ஆக பணியாற்றிய திருச்சியை சேர்ந்த சரவணன் வீரமாக போராடி எதிரிகள் பலரை அழித்தார். இந்த போரில் இந்திய ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிருந்தாலும் மேஜர் சரவணனை இழந்தது. எல்லை காக்கும் போரில் மரணம் அடைந்த மேஜர் சரவணனின் வீரம், உயிர் தியாகத்தை பாராட்டி அவருக்கு மிக உயரிய ‘வீர் சக்ரா’ என்ற விருது வழங்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post