திருச்சியில் வட்டாட்சியர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது

 


திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலவரி திருத்தம் தொடர்பான பிரிவில் பணியாற்றும் வட்டாட்சியர் கோகுல் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தன்னுடைய நிலவரி திருத்தம் செய்வதற்காக  வட்டாட்சியர் கோகுலை அணுகியுள்ளார். நிலவரி திருத்தம் செய்வதற்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்து 50ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில்  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறையினர் கையும் களவுமாக வட்டாட்சியர் கோகுல் ஐ கைது செய்தனர்

Post a Comment

Previous Post Next Post