திருப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேனி இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது

 


தேனி மாவட்டம் சின்னமனூர் சந்தை புதுத்தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் மணிகண்டன் (28). இவர் பெருமாநல்லூர்அருகே உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தங்கி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்அளித்த புகாரின்பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி நகர்காலனியைச் சேர்ந்தவர் எம்.பாண்டி (28). அவரது தம்பி ஜீவா (27). இருவரும் திருப்பூர்மாவட்டம் தொரவலூர் பகுதியில் தங்கி வெங்காயம், தேன் வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், சகோதரர்கள் பொம்ம நாயக்கன்பாளையத்துக்கு தேன் வியாபாரத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டி, ஜீவா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Post a Comment

Previous Post Next Post