பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது வங்கி சார்ந்த சேவை, அரசின் மானியத்திட்டம் போன்ற அனைத்து சலுகைகளையும் பெற ஆதார் எண் அவசியமாகியுள்ளது எனவே ஆதார் அட்டையில் பதிவு செய்ய இந்தியா முழுவதும் சி எஸ் சி மூலமாக ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளன, தமிழ்நாட்டில் 200 கும் மேற்பட்ட இடங்களில் சி எஸ் சி, வி எல் இ க்கள் ஆதாரில் திருத்தங்கள் செய்து தருகின்றனர், இங்கு தொலைபேசி எண், பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற அனைத்து திருத்தங்களும் செய்து தருகின்றனர், இதற்க்கு கட்டணமாக ரூபாய் 50 மட்டும் பெற்றுக்கொண்டு சிறந்த முறையில் சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து நமது நிருபர், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரன் தொடர்புகொண்டு பேசியபோது அவர் கூறியதாவது, ஆதார் அட்டையில் திருத்தம் செய்யசி எஸ் சி, வி எல் இ க்கள் சிறப்பான முறையில் மக்களுக்கு சேவை செய்துகொண்டு வருகின்றனர், அங்கு ஆதார் அட்டையில் பிழை திருத்தம் செய்ய ரூ. 50 மட்டும் சேவைக்கட்டணமாக வசூலித்து வருகின்றனர், மேலும் UIDAI மற்றும் சி எஸ் சி அங்கீகாரம் பெறாத சில தனியார் கம்ப்யூட்டர் செண்டர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக செய்திகளில் அறிந்தேன், எனவே பொதுமக்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஆதார் சேவை மையங்கள், வங்கிகள், தபால் நிலையம் அல்லது சி எஸ் சி மூலமாக இயங்கும் ஆதார் செண்டர்களுக்கு சென்று ரூ. 50 செலுத்தி அனைத்து திருத்தங்களும் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் எந்தெந்த இடங்களில் ஆதார் சேவைமையங்கள் இயங்குகின்றன என்பதை அறிய
https://appointments.uidai.gov.in/easearch.aspx என்ற இணையதள முகவரி மூலமாக தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தார்.