திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தமிழ்நாடு முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த முத்தரையர் சங்க அனைத்து நிர்வாகிகளும் மற்றும் முத்தரையர் சங்க இளைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் முத்தரையர் சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு அரசு மூலமாக தனி இட ஒதுக்கீடு வேண்டுதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது இதுபற்றி தமிழக முதல்வரிடம் நேரில் சென்று மனு கொடுப்பது கொடுத்த மனு நிறைவேறாவிட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடைபெறும் என்றும் சென்னையில் முத்தரையர் சங்க கட்டிடம் வேலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முத்தரையர் சங்கத்திலிருந்து இறந்துபோன முன்னாள் நிர்வாகிகள் படத்திறப்பு விழாவும் நடைபெற்றது
மாநிலத் தலைவர் அம்பலத்தரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள் இறுதியில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றியுரை தெரிவித்தார்