திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே குருவம்பட்டி மேற்கு பகுதியில் சித்தாம்பூர் செல்லும் சாலையில் சுமார் 150 மீட்டர் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது
இந்த சாலையில் மணச்சநல்லூர் மற்றும் திருப்பைஞ்ஞீலி பகுதியில் இருந்து முசிறி செல்லும் அனைவரும் செல்வார்கள்.
மழைக்காலங்களில் இந்த குழியில் நீர் நிரம்பி வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது ஆகையால் குருவம்பட்டி மேற்கு பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்