கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி உபரி நீரை காவிரி ஆற்றில் வடக்கு புறத்தில் உள்ள சுமார் 2 கிலோமீட்டர் முதல் 12 கிலோ மீட்டர் சுற்றளவில் சித்தாம்பூர், கோமங்கலம், நெய்வேலி மற்றும் திருத்தலையூர் ஏரிகளுக்கு ராட்சத குழாய் மூலமாகவோ அல்லது சிறிது கால்வாய் மூலமாகவோ நீர் கொண்டு செல்ல வேண்டும் என்று சில சமூக அமைப்புகளும், விவசாய மக்களும், இளைஞர்களும் நீண்ட ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில்.
தற்போது,
கொல்லிமலையில் இருந்து உருவாகி வரும் அய்யா ஆறு முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த இடங்களுக்கு மட்டுமே செல்லும்,
இதன் மூலம் சுமார் 50 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் சுற்றளவுள்ள பல்லாயிரம் ஏக்கர் நீர்பாசனம் விவசாயம் செய்ய உதவுகிறது.
கொல்லிமலையில் இருந்து புளியஞ்சோலையில் பிரிந்து, காவிரி ஆறு வரை சென்றடைகிறது இந்த நீர். வரும் வழியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மிகப்பெரிய ஏரிகள் உள்ளது. அதில் 5 முதல் 10 ஏரிகள் மட்டுமே நிரம்பி வழிகின்றன.
மற்ற ஏரிகளுக்கு செல்லும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் உள்ளதால், தண்ணீர் ஏரிகளுக்குள் செல்லாமல் காவிரி ஆற்றில் கலந்து, கடைசியில் கடலில்தான் கலக்கிறது.
விவசாயிகள் கூறுகையில்...
கொல்லிமலையில் இருந்து வரும் மழை நீரின் மூலமாக
முசிறி அருகே உள்ள திருத்தலையூர் ஏரியை நிரப்பினால், அந்த ஏரியின் கிழக்கு பகுதியில் உள்ள சிறுப்பத்தூர் உப்பார் நீர்தேக்கம் முதல், தெற்கு பகுதியில் பாலைவணம் போல் கிடக்கும் நிலங்களும் கிணற்று பாசணம் மூலம் விவசாயம் செய்யமுடியும்.
பிறகு நெய்வேலி, கோமங்கலம், சித்தாம்பூர் ஏரிகளுக்கு ஆற்றில் சரியாக தூர்வாரி நீர் நிரப்பிவிட்டால் அந்த ஏரிகளில் இருந்து உபரி குளங்களுக்கும் கொண்டு செல்லலாம் என்றனர்.
ஆகையால்,
அதிகாரிகள், தற்போது கண்ணனூர் வரை வந்துள்ள கொல்லிமலை மழை நீரை அங்கிருந்து வரும் நீர் வழித்தடங்கள் மூலமாக ஒவ்வொரு, ஏரி குளங்களையும் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.