சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.75 லட்சம்

 


அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் இரண்டு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இம்மாதம் முதல்முறையாக நேற்று கோவில் இணைஆணையர் கல்யாணி, திருச்சி உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் பலர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.75 லட்சத்து 47 ஆயிரத்து 58-ம், 1 கிலோ 880 கிராம் தங்கமும், 4 கிலோ 215 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 100-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Post a Comment

Previous Post Next Post