திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள காடுவெட்டி மேல வழிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அவிநாசி. இவரது மகன் பெரியசாமி (வயது 22). கட்டிட தொழிலாளியான இவருக்கும், பெரியநாச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகள் வினோதினிக்கும்(19) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி மற்றும் காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், புதுப்பெண் வினோதினியை வரதட்சணை கேட்டும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் தெரியவந்ததையடுத்து வினோதினியின் கணவர் பெரியசாமி, பெரியசாமியின் தாய் கருப்பாயி(59), மற்றும் பெரியசாமியின் உறவினர்களான சம்பூரணம்(29), தொட்டியத்தை அடுத்த வெங்காயபட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் (42) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.