உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவையில்லை: கே.எஸ்.அழகிரி

 


ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசுகிறார்.

அதில், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தான் உண்மையான ஜனநாயகத்தின் ஆணிவேர் என்றும், மக்கள் செல்வாக்கு பெற்றவர்களே இங்கு வெற்றி பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் நாம் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பது இல்லை என்றுகூறிய அவர், உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட வேண்டும் என்றும், கூட்டணி தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை பொறுத்தமட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு சரியான திசையில் சென்றுகொண்டு இருப்பதாகவும், நிச்சயம் சட்டப்படி ‘நீட்’ தேர்வு ரத்தாகும் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அதேவேளையில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அது பொது பட்டியலில் நீடித்தால் தான் மத்திய அரசின் நிதி உதவிகள் கிட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நியமனத்தை எதிர்த்தது ஏன்? தலைமை இல்லாமல் காங்கிரஸ் தடுமாறுவது ஏன்? தி.மு.க ஆட்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்பது உள்ளிட்ட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post