சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் திடீரென மயங்கி விழுந்தாலோ அல்லது தீ விபத்தில் சிக்க நேரிட்டாலோ, கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டாலோ அவர்களை எப்படிக் காப்பாற்றுவது மற்றும் சமையல் எரிவாயுவை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில், சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் பங்கேற்று ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி காட்டினர்.இதில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், காவலாளிகள் கலந்து கொண்டனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்