கவண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கீதாவுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

 


திருச்சி மாவடடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு நடுநிலை பள்ளிகளில் சிறந்த பள்ளியாக பரிசு பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா வுக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது கொடுத்துள்ளது...

இவர் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

பணியில் சேர்ந்த நாட்கள் முதல் பள்ளியே குடும்பம், பள்ளி மாணவர்களே குழந்தைகள் என பள்ளி மாணவர்களின் முன்னேற்றமும் பள்ளியின் முன்னேற்றமும் காண்பதில் மட்டுமே கவனமாக இருந்தார்.

அந்த வகையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆங்கில வழிக்கல்வி மற்றும் சமூக சிந்தனை உள்ள முன்னாள் மாணவர்கள் உதவியுடன் சிறிய வேன் அமைத்து வேன் மூலம் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில் ஊரில் உள்ள குழந்தைகளையும் இவர் பள்ளியில் சேர்த்தது மிகவும் சிறப்பு..



சிறப்பான பள்ளி என்று மாவட்டத்தில் முதலிடம்.

சிறந்த ஆசிரியர் என அரசிதழில் முதல் பெயர்.

என அனைத்திலும் சிறப்பாக உள்ளது கவண்டம் பட்டி அரசு பள்ளி

Post a Comment

Previous Post Next Post