பழைய வாகனங்களை அழிக்கும் மத்திய அரசின் புதிய கொள்கை நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவிடும் -மத்திய அமைச்சர் நிதின்கட்கரி


 

புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கும், ஏற்றுமதிக்கும் இந்த கொள்கை உதவும் என்று கூறினார்.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், பழைய வாகனங்களை அழிப்பதற்கான மையம் ஒன்றும், வாகனங்களுக்கான தகுதியை ஆய்வு செய்யும் மையமும் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

பெருநகரங்களில் அதிகமான மையங்கள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post