நாட்டின் வளர்ச்சியில், தொழில்நுட்பம் மற்றும் புதிய சிந்தனைகள் இரட்டை உந்து சக்திகளாக திகழ்கின்றன என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில், காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதுகளை வழங்கினார்.
தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அறிவுசார் சொத்துரிமையை உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கவும், அதுதொடர்பான, சட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
உலகின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இந்தியா உருவெடுக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:
இந்தியா