முசிறி அருகே திருதியமலை ஊராட்சியில் டிரான்ஸ்பார்மர் பழுதால் குடிநீர் பிரச்சினை : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருத்தியமலை ஊராட்சியில் அமைந்துள்ள (ஜம்பு) காவேரி அமூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருத்தியமலை ஊராட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் இங்கிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றபடுகிறது ஜம்பு அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து ஒரு வாரம் காலமாக ஆகியும் மின்வாரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இதனால் திருத்தியமலை ஊராட்சியில் உள்ள கிராமங்களில்  மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் எற்ற முடியாமல் மக்கள் ஒரு வாரம் காலமாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் எனவே பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ் நாடு மின்சார வாரியம் முசிறி பிரிவு தன்டலை புத்தூர் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post