தனியாருக்கு தடுப்பூசி கட்டணம் நிர்ணயம்

 


கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என, மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிஷீல்டு தடுப்பூசி போட, ஒரு டோசுக்கு, 780 ரூபாயும், கோவாக்சின் ஊசி போட, 1,410 ரூபாயும், ஸ்புட்னிக் வி ஊசி போட, 1,145 ரூபாயும், தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கலாம். இதில் வரியும், சேவை கட்டணம், 150 ரூபாயும் அடங்கும்

சேவை கட்டணமாக, 150 ரூபாயை விட அதிகமாக வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post