திருச்சி மாநகரபோலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு

 


திருச்சி மாநகர சட்டம் ஒழுங்குப்பிரிவு போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பு வகித்து வந்த பவன்குமார் ரெட்டி சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து திருச்சி மாநகர துணை கமிஷனராக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சக்திவேல் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று மாலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அமைச்சர் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

Post a Comment

Previous Post Next Post