பெரமங்கலம் அருகே மரத்தோடு மரமாக மின்கம்பம் : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 



திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், பெரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மணியம்பட்டி கிராமத்தில் பெரிய  மரத்தின்மீது உரசியவாறு மின்கம்பம் நடப்பட்டுள்ளது ஏற்கனவே மின்சார கம்பி தனித்தனியாக உரசாமல் போனதை தற்போது ஒன்றோடு ஒன்று உரசும் படி மின் கம்பம் நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காற்று மற்றும் மழை பெய்யும்போது  உராய்வு ஏற்படுகிறது மற்றும்  மின்சாரம் பாயும் அளவிற்கு மரத்தின் மீது மின்சார மின் கம்பி  உள்ளது  அதிகாரியிடம் போன் செய்து கேட்டால் மரத்தை வெட்டிக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறுவதாக சொல்லப்படுகிறது 

மண்ணச்சநல்லூர் மின்சார அலுவலகத்துக்கு ஏற்கனவே பொதுமக்கள் சார்பில் மனுக்கள் அனுப்பி மூன்று மாதம் ஆன நிலையில் தற்போது, மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த பகுதி மக்கள்.


Post a Comment

Previous Post Next Post