இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

 


இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக ல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், BCA., B. Sc., Yoga for human, B.P.Ed., M.Tech., M.A., M. Sc., MBA., M.Ed., MSW உள்ளிட்ட 15 வகையான படிப்புகள் மற்றும் சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளநிலை மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேர +2 மதிப்பெண் வெளியான 15 நாட்களுக்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இதர முதுநிலை, சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளில் சேர வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் அறிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post