தாயா..? தாரமா..? சிக்கித் தவிக்கும் ஆண்கள்

 


பள்ளி காலம் முதல், கல்லூரி, வேலைக்கு சென்ற காலம் வரை தன் தாய் பேச்சை கேட்காமல் கால் போன பக்கம் நடந்து... ஊர் சுற்றி திரிந்து யார் பேச்சையும் கேட்காமல் தனக்குத்தானே ராஜா போல் வாழ்ந்து வந்து. வீட்டிற்கு செல்லப்பிள்ளையாக வளர்ந்த ஆண் மகன்கள் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு அப்படியே மாறி போக கூடும்.

அந்த வகையில்,

வயசு ஆச்சு காலா காலத்தில் தன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவேண்டும் என்று பேச்சு ஆரம்பித்து, அலைந்து திரிந்து, ஜாதகம் பார்த்து ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பர் பெற்றோர். 

அங்கிருந்து ஆரம்பிக்கிறது ஆண் மகன்களின் பாரபட்சம்.

கல்யாணமான ஒரு சில மாதங்கள் வரை புது பெண் என ஆணின் தாய், தந்தையர் எந்த வேலையும் சொல்லாமல் இருப்பது உண்டும்.  பிறகு தன் கடமைகளை தனது மருமகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தனது வேலைகளையும், தன் உறவுக்காரர்களையும் அடையாளப்படுத்த முற்படுவர்.

மாமியார் சொல்லும் மருமகளுக்கு சொல்லும் விதம்,

அவர் படித்திருந்தால் மருமகளுக்கு தகுந்தாற்போல் சொல்வார். ஆனால், படிப்பறிவு இல்லாமல் இருந்தால் மாமியாருக்கென்று உள்ள பேச்சு வாக்கியங்களில் நன்மைகள் பல கூறி வருவார்.

மாமியார் நல்லது கூறுவது சொல்லும் விதம் மருமகளுக்கு சரியில்லை என்பதால், அவர் கூறும் நல்ல விசயங்களையும் அறவே தவிர்த்து விடுகின்றனர்.

இங்குதான் ஆரம்பிக்கிறது ஆண்மகனின் போராட்டம்.

உங்க அம்மா பேசுறது சரியில்லையென தன் மனைவி தன்னிடம் கூறுவதும்.

உன் பொண்டாட்டி நான் எந்த நல்லது சொன்னாலும் கேட்பதில்லை என்று கூறுவதுமாக இருந்துகொண்டே வரும்.

பொண்டாட்டி பேச்சை கேட்கும் புருஷன் என பெயர் வாங்க நினைத்தால், அவன் பொண்டாட்டி பேச்சை மட்டும் கேட்பான்.

தாய் பேச்சை கேட்கும் மகன் என்றால் அவன், தாய் பேச்சை மட்டும் கேட்பான்.

இரண்டு பேரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதால் தாய் கூறும் நல்ல விஷயங்களை மனைவியிடம் கூறும் கணவன். அப்போதும் கூட, உன் அம்மா சொல்றாதாலதான் நீ சொல்ற என்ற வார்த்தைகள் மனைவியிடம் வருவதுண்டு.

தன் மனைவிக்கு பேசும் விதங்கள்  இது போல் அவள் வளர்ந்ததில்லை என்று கூறும்போது, எனக்கு புதுசா பேச தெரியாது என தாய் பேசுவதும் உண்டு.

இங்கு யாரை குறை சொல்வது

எப்படி அரவணைப்பு செய்வது என

பல யோசனைகளோடு பெற்றோருடன் சேர்ந்து வாழ போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஒவ்வொரு ஆண்களும்.

Post a Comment

Previous Post Next Post