தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழையும், இடியுடன் கூடிய மழையும் பெய்து வந்தது. நேற்று இரவு 10 மணியளவில் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இடி விழுந்து சுமார் 14 ஆயிரம் லிட்டர் ஆயில் உள்ள டிரான்ஸ்பார்மர் எரிந்து நாசமானது.
உப்பிலியபுரம், துறையூர், பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் இணைந்து இரவு 12 மணியளவில் போராடி தீயை அணைத்தனர். இந்த துணை மின்நிலையத்தில் இருந்து சுமார் 25 கிராமங்களுக்கு மின்சாரம் விநியாகம் செய்யப்பட்டது. தற்போது அந்த கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கும் சூழ்நிலையில் உள்ளது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்