இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 198 மதுக்கடைகளில், 2 ஆயிரத்து 50 மதுக்கடைகளுடன் பார்கள் இணைக்கப்பட்டுள்ளன என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், வருவாயைப் பெருக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் அதிகமான அளவில், தனியார் பார்களை திறக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவது அதிர்ச்சி அளிப்பதாகவும், வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்பட முனைவது கண்டிக்கது என்றும் தெரிவித்துள்ள அவர், இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
Tags:
தமிழகம்