தமிழகத்தில் கடந் ஒரு மாதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பஸ் போக்குவரத்து வாகனங்கள் மட்டும்தான் ரோட்டில் இல்லை. மற்றடி இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அலைந்தவண்ணமாகவே உள்ளனர். போலீசார் மடக்கி கேட்டால் மெடிக்கல் போகிறோம், ஆஸ்பத்திரி போகிறோம் என்று கூறுகின்றனர்.
போலீசார் தேக்கி வாகனங்களை பிடிங்கி வைத்துப்பாங்க என்ற பயம்தான் இருக்கே தவிர கொரோனா தொற்று நமக்கு வந்தால், நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் பெரிய இழப்பு ஏற்படக்கூடும் என யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை.
முன்பெல்லாம் மதுபானங்கள்தான் பிளாக்கில் கொடுத்துட்டு இருந்தாங்க. ஆனால், மளிகை சாமான் முதல், கறி முதற்கொண்டும் அனைத்தும் பிளாக்கில் வாங்கிகிட்டு இருக்காங்க. ஊரடங்கு என்பது உண்ணாவிரதம் போல தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் சமைத்து உண்டு இந்த கொரோனாவையும், ஊரடங்கையும் வெல்ல வேண்டும்.
ஒரு சில வியாபாரிகளும் தன வருமானத்திற்காக கடைகளை எப்போதும் போல மறைமுகமாக வியாபாரம் பார்த்துதான் வருகின்றனர். இதனால், கடைகாரர் மற்றும் வாடிக்கையாளர் என அனைவருக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. நாளை முதல் காலை 6 மணி & 5 மணி வரை ஒரு சில கடைகள் திறக்கலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மக்கள் கொரோனா பயமின்றி கூட்டம் கூட்டமாகத்தான் செல்வார்கள்.