மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் நரேந்திர விஷ்வையா. 53 வயதான இவர் தனது மனைவியுடன் இந்தூரில் உள்ள சுதாமா நகரில் வசித்து வந்தார்.
இதற்கிடையில், நரேந்திர விஷ்வையா தனது மனைவியுடன் வசித்து வரும் வீடு அருகே எதிர்வீட்டில் மற்றொரு குடும்பம் வசித்து வந்தது. அந்த எதிர்வீட்டில் செல்லப்பிராணி நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. அந்த செல்லப்பிராணி நாய், விஷ்வையா மற்றும் அவரது மனைவி தங்கள் வீட்டிற்கு செல்லும்போது அவ்வப்போது குரைப்பது வழக்கம்
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு விஷ்வையாவின் மனைவி தனது வீட்டிற்கு செல்லும் போது எதிர்வீட்டில் இருந்த செல்லப்பிராணி நாய் வேகமாக ஓடிவந்து விஷ்வையாவின் மனைவியை கடித்துள்ளது.
எதிர்வீட்டு நாய் தன்னை கடித்தது குறித்து விஷ்வையாவிடம் அவரது மனைவி கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விஷ்வையா தன்னிடம் உள்ள உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக்கொண்டு எதிர்வீடு அருகே நின்றுகொண்டிருந்த அந்த செல்லப்பிராணி நாயை சுட்டார். துப்பாக்கிச்சூட்டில் கழுத்துப்பகுதியில் குண்டுபாய்ந்த செல்லப்பிராணி நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறிந்து செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பெயரில் நாய் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நரேந்திர விஷ்வையாவை போலீசார் கைது செய்தனர்
Tags:
இந்தியா