முசிறி தாலுகா பெரமங்கலம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 290 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முசிறி ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், ராஜ்மோகன், தண்டலைபுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் சுகாதார துப்புரவு பணியாளர்கள் பெரமங்கலம் கிராமத்தில் சுகாதார பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்