உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு



சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும்.

கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post