திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுவது வழக்கம்.
கோவிட் 19 காரணமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு போட்டிருந்த கால கட்டத்தில் சனிக்கிழமை மாலை வாரச்சந்தை நடைபெற்று வந்தது
கடந்த வாரம் மளிகை கடை போல அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக 12 மணி வரை மட்டுமே அனுமதி என அரசு அறிவித்திருந்தது. அப்போதிலிருந்து சனிக்கிழமை மாலை நடைபெற்ற வாரச்சந்தை பிறகு சனிக்கிழமை காலை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்றுடன் கடுமையான கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை அறிவித்ததால் காலை 10 வரை மட்டுமே மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி என அறிவித்திருந்தது
இதனால் மக்கள் இந்த பகுதியிலேயே பெரிய சந்தையாக செயல்படும் திருப்பைஞ்ஞீலி வாரசந்தைக்கு இன்று காலை மக்கள் நிறையவே கூடியதால் போலீசார் விரைவில் கடைகளை அகற்ற சொன்னததால் அவசரச அவசரமாக ஆரம்பித்த நேரத்திலையே முடித்து காய்கள் கொண்டு வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடடன் திரும்பினர்
இனி கிராமங்களுக்கு வாகனங்களில்தான் காய்கள் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வாகன அனுமதி கொடுக்கும்போதே எத்தனை நபர்கள் அனுமதி அவர்களுக்கு கோவிட் பாசிட்டி நெகடிவாக உள்ளதா என உறுதிபடுத்தி அனுமதி கொடுத்தால் நல்லது என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.