தமிழக அரசு அறிவிப்பை தொடர்ந்து திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பேருந்துகளும் இயங்க தொடங்கின.
வரும் மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதால் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளை திறக்கவும் பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு அனுமதியளித்தது.
இதனையடுத்து திருச்சியில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கே அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பெரியகடை வீதி, மேலரண் சாலை, மெயின்கார்டு கேட், தெப்பகுளம், தில்லைநகர், கண்டோன்மெண்ட் என அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.
காந்திசந்தை, மரக்கடை பகுதிகளில் மளிகை கடைகளும், காய்கனி கடைகளும் அனைத்து சலூன் கடைகளும் திறக்கப்பட்டன. இதேபோல் மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் பேருந்து நிலையம் சுத்தப்பட்டுத்தப்பட்டு புறநகர் பேருந்துகள், நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல் சத்திரம் பேருந்து நிலையம் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமையும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இரவு 9 மணிவரை அனைத்து கடைகளும் திறக்கப்படும்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்