கடனை திருப்பி செலுத்த முடியாமல்அரிசி ஆலை ஊழியர் தீக்குளித்து தற்கொலை

 திருச்சி, 

திருச்சி உறையூர் கக்கன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). அரிசி ஆலை ஊழியர். இவருடைய மனைவி கடந்த 5 ஆண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பல்வேறு இடங்களில் மருத்துவ செலவுக்காக கடன் வாங்கி உள்ளார். ஆனால் கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த செந்தில்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Post a Comment

Previous Post Next Post