இன்று சந்திர கிரகணம் - இந்தியாவில் சில பகுதிகளில் காணலாம்


இது குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

பகுதியளவு சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காண முடியும் என்று தெரிவித்துள்ளது. இன்று மாலை சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.
சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சூரிய கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும். அதை தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும்.

இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி காணலாம்.

 

Post a Comment

Previous Post Next Post